News September 27, 2025

புதுவை: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

image

நெல்லித்தோப்பை சேர்நதவர் துரை இவரது மனைவி ரேகா, சொத்து பிரச்சினையால் துரையை கனகன் ஏரி பகுதியில் அவரது உறவினர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்தநிலையில் ரேகாவிற்கு சொந்தமான கடையை அவரது சித்தி சித்ரா அபகரிக்க முயன்றார். இதனை ரேகா தட்டிகேட்டார், இதில் ஆத்திரம் அடைந்த சித்ரா, அவரது மகள் ரேகாவை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

Similar News

News January 13, 2026

புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

தென்கிழக்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

புதுச்சேரி: 2000ஆம் ஆண்டு பழமையான கோயில்!

image

காரைக்காலில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்.!

News January 12, 2026

BREAKING புதுச்சேரி: ரூ.3000 பொங்கல் பரிசு அறிவிப்பு

image

புதுச்சேரி மாநிலத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த தொகை பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ பயனாளிகளின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். மேலும் இதற்கான கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் முழுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

error: Content is protected !!