News September 27, 2025
BREAKING: ஓபிஎஸ், TTV-க்கு அழைப்பு.. புதிய திருப்பம்

கூட்டணியில் இணைய TTV, OPS-க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தினகரனை BJP தலைவர்கள் சந்திப்பது நல்லதுதான்; விரைவில் நல்ல முடிவு வரும் எனக் கூறிய அவர், நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம், தேவைப்பட்டால் நானும் டிடிவியை சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். நேற்று OPS – TTV சந்தித்து பேசியிருந்த நிலையில், நயினார் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News January 12, 2026
ஈரானில் இந்தியர்கள் கைதா?

<<18832349>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாக 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் நிலைமை குறித்த உடனடி தகவல்களுக்கு நம்பகமான செய்தி நிறுவனங்களை அணுகவும் அறிவுறுத்தியுள்ளார்.
News January 12, 2026
AI-ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா?

மனிதர்களின் கைகளை மீறி போகும் முன் AI-ஐ கட்டுப்படுத்த வேண்டும் என AI நிறுவனங்களை மைக்ரோசாஃப்ட் AI CEO முஸ்தபா சுலைமான் அறிவுறுத்தியுள்ளார். உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை நீங்கள் வழிநடத்த முடியாது. அதனால் தான் மனிதர்களின் மேற்பார்வையில் ‘Super Intelligence’ நோக்கிய பயணம் அமைய வேண்டும் என்கிறோம். எனவே, மனிதர்களுக்கு தீங்கிழைக்காத வகையில் AI-ஐ மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 12, 2026
இந்தியாவிற்குள் நுழைய 1,000 பயங்கரவாதிகள் தயார்!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான JeM-ன் தலைவர் மசூத் ஆசார் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆயிரக்கணக்கான தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தன்னை வலியுறுத்தி வருவதாகவும் மசூத் ஆசார் பேசுகிறார். மேலும், தங்கள் நெட்வொர்க்கின் ஆள்பலத்தை கூறினால் உலகமே நடுங்கும் என்றும் கூறுகிறார்.


