News September 27, 2025
ஏன் ஹாஸ்பிடல் சென்றாலே நாக்கை நீட்ட சொல்றாங்க?

எந்த பிரச்னைக்கு ஹாஸ்பிடல் சென்றாலும், டாக்டர்கள் முதலில் ‘நாக்கை நீட்டுங்க’ என்பார்கள். அது ஏன் என யோசித்தது உண்டா? ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை நாக்கை வைத்தே கண்டறியலாம் ◆நீரிழப்பு ஏற்பட்டால், நாக்கு மஞ்சளாக இருக்கும் ◆உடலில் ரத்த சோகை இருந்தால், நாக்கு வறண்டு போயிருக்கும் ◆நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், நாக்கு வெள்ளையாக மாறும் ◆தைராய்டு இருந்தால், நாக்கு கொஞ்சம் தடித்து காணப்படும். SHARE.
Similar News
News January 3, 2026
அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

தமிழகத்தை அதிர வைத்த காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் சங்கர மணிகண்டன், டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட கோர்ட்டில் அணுகினர். அவர்களது மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
News January 3, 2026
யாருடன் கூட்டணி? தேமுதிகவின் கிளைமாக்ஸ்

தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கிளைமாக்ஸை வரும் 9-ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளதாக விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவரிடம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை என சூசகமாக பதில் அளித்தார்.
News January 3, 2026
அழகம்மா அனுபமா பரமேஸ்வரன்

பாரம்பரியம் மற்றும் மார்டன் லுக் என இரண்டிலும் அழகாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவரது போட்டோக்களை பார்த்து பூக்களின் வாசம் நீயோ, பூங்குயில் பாஷை நீயோ, பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த போட்டோக்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


