News September 27, 2025
தஞ்சாவூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தஞ்சாவூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
2.பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
3.கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
4.சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநர் கலந்து கொள்கிறார். அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கூட்டத்தில் நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
தஞ்சை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து: வாலிபர் பலி

பாபநாசம் அடுத்த காஞ்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (28). இவர் நண்பர்களுடன் தஞ்சை வந்துவிட்டு வீடு திரும்பும் போது, தஞ்சை மேம்பாலம் அருகே டயர் வெடித்ததில், கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வில்சன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி சென்ற லோகேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 17, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


