News September 27, 2025
கிருஷ்ணகிரி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு…

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 17, 2025
சிங்காரப்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நாளை அக்-18ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை, சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் இலவசம் முழு உடல் பரிசோதனை & சிகிச்சைகள் நடைபெற உள்ளது. சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துளார்.
News October 16, 2025
கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 16, 2025
கிருஷ்ணகிரி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*