News September 27, 2025

போடி அருகே சாக்கடையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

image

போடி பகுதியில் உள்ள சாலை காளியம்மன் கோவில் அருகே உள்ள சாக்கடை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக போடி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமிக்கு நேற்று (செப்.26) தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 14, 2026

தேனியில் 15 கிலோ புகையிலை பறிமுதல்

image

கூடலூர் தெற்கு போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த ஜெயச்சந்திரன், விஜய், வினோத் ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் மூவரும் 15.482 புகையிலை பொருட்களை வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News January 14, 2026

தேனியில் திருக்குறள் வார விழா போட்டி- கலெக்டர் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் குறள் வார விழா கொண்டாடப்படவுள்ளது. அதன் ஒரு நிகழ்வாக பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 19.01.2026 அன்று காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 14, 2026

தேனி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக கோடங்கிபட்டி பகுதியில் நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கௌதம் (25) என்பவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!