News September 27, 2025
புதுவையில் எம்எல்ஏ உருவப்படம் எரிப்பு!

புதுவையில் நடந்த வணிகர்கள் உரிமை மீட்பு மாநாட்டில் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் அரசை விமர்சித்து பேசினார். இந்தநிலையில் மதகடிப்பட்டு மேம்பாலம் அருகில் திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ராஜா தலைமையில், அங்காளன் எம்எல்ஏவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிலர் திடீரென அங்காளன் உருவப்படத்தை தரையில் போட்டு தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News January 12, 2026
புதுவை முதல்வரிடம் செவிலியர் சங்கம் மனு

புதுச்சேரி செவிலியர் நலசங்கம் சார்பில், செவிலியர் பதவி உயர்வு & அரசு மருத்துவ மனைகளில் உள்ள காலி நிரப்ப பணியிடங்களை கோரி சங்கத் தலைவர் சாந்தி, அனுராதா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் திலகா, நிர்வாகிகள் காந்திமதி, ராசாயி, சுமதி, கவிதா, கவுரவ செயலாளர் ஜானகி ஆகியோர் சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
News January 12, 2026
புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் முக்கிய அறிவிப்பு

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி வெளியிட்டுள்ள செய்தியில், அரசின் செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் காங்கிரஸ் சாா்பில், வரும் 21-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை புதுச்சேரிக்கான நடைப்பயணம் நடத்தப்பட உள்ளது. இதில் அகில இந்திய மற்றும் பல்வேறு மாநிலத் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா். வரும் 21 ஆம் தேதி முத்தியால்பேட்டையில் தொடங்கப்படும் என்றார்.
News January 12, 2026
புதுச்சேரி: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


