News September 27, 2025
இனி டைரக்டர் வரலட்சுமி.. வெளியான அறிவிப்பு!

திரையில் ஹீரோயினாக வசீகரித்து, வில்லியாக மிரட்டிய வரலட்சுமி சரத்குமார், தற்போது மற்றொரு பரிணாமத்தில் ஈர்க்கவுள்ளார். தோசா டைரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘சரஸ்வதி’ என்ற படத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமியுடன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
Similar News
News September 27, 2025
ஜாலியாக சுற்றிவர சூப்பர் ரயில் பயணங்கள்

இந்தியாவில் சுவாரசியமான சாலை வழி பயணங்கள் ஏராளமானவை உள்ளன. அதேபோல் ரயில் பயணங்களும் உள்ளன. அதில், ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இயற்கை எழில் கொஞ்சும் சிறந்த ரயில் பயணங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் செய்த பயணம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 27, 2025
TVK Vs DMK இடையே போட்டி: விஜய்

திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற மாட்டோம்; நடைமுறைக்கு எது சாத்தியமோ, அது மட்டுமே தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று விஜய் தெரிவித்துள்ளார். 2026-ல் திமுக – தவெக இடையில்தான் போட்டி எனக் கூறிய அவர், ஆட்சிக்கு வந்த உடனே பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, தரமான கல்வி, மக்களுக்கான மருத்துவ வசதி போன்ற அனைத்தையும் உடனே தவெக செய்யும் என உறுதியளித்தார்.
News September 27, 2025
+2 போதும்.. மத்திய அரசில் ₹25,500 சம்பளத்தில் வேலை!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள 552 Head Constable பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-வது அல்லது +2 முடித்த 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி, உடற்தகுதி, மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட 5 தேர்வுகள் நடைபெறும். மாதம் ₹25,500- ₹81,100 வரை வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <