News September 27, 2025
பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

*உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் பழைய சோற்றில் இருக்கின்றன. *இதை சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். *உடல் உஷ்ணம் குறையும். * இது அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கலை நீக்கும். *உடல் சோர்வை குறைக்கும். *தோல் தொடர்பான வியாதிகளுக்கும் தீர்வு தரும். *இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். *பழைய சோறு என்றாலும் நீருற்றிய 15 மணி நேரத்திற்குள் சாப்பிடுங்கள்.
Similar News
News September 27, 2025
+2 போதும்.. மத்திய அரசில் ₹25,500 சம்பளத்தில் வேலை!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள 552 Head Constable பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-வது அல்லது +2 முடித்த 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி, உடற்தகுதி, மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட 5 தேர்வுகள் நடைபெறும். மாதம் ₹25,500- ₹81,100 வரை வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News September 27, 2025
BREAKING: விஜய் பிரசாரத்தில் 15 பேர் மயக்கம்

நாமக்கல்லில் விஜய்யின் பிரசார கூட்டத்தில் 15 பேர் மயக்கமடைந்தனர். அதில், 5 பேர் ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 8.30 மணிக்கு விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் 3 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். இதனிடையே, கடும் வெயில், கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 15 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News September 27, 2025
அமெரிக்காவுக்கு ஒத்த அடி பாதை: விஜய் நையாண்டி

பிரசாரத்தில் ஏதாவது புதுசா பேசுங்க விஜய் என விமர்சனம் வைத்தவர்களுக்கு நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் கிண்டலாக பதிலளித்துள்ளார். புதுசா என்ன பேசுறது.. அமெரிக்காவுக்கு ஒத்த அடி பாதை போடப்படும், செவ்வாய் கிரகத்தில் IT கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என CM மாதிரி அடிச்சி விடுவோமா என தொண்டர்களை பார்த்து கேட்டார்.