News September 27, 2025

மயிலாடுதுறை மக்களே குறைந்த விலை! ஏமாறாதீங்க!

image

மயிலாடுதுறை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக பல போலியான ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவற்றை நம்பி முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 14, 2026

மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

மயிலாடுதுறை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

image

மயிலாடுதுறை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

மயிலாடுதுறையில் கலைவிழா நாளை தொடக்கம்

image

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல கலைப்பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை (ஜன.15) கலைவிழா தொடங்குகிறது என தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் மாலை 5 முதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது.

error: Content is protected !!