News September 27, 2025

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>TN nilam citizen porta<<>>l தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 18, 2026

திருச்சி : தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘572’ அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10=ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.24,250 – ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

திருச்சி: கோளரங்கத்தில் திறனறித் தேர்வு

image

திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில், 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வானது வரும் ஜன.26-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0431-2332190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.

News January 18, 2026

திருச்சி: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!