News September 27, 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விமர்சித்த EPS

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை EPS கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கண்டுபிடிப்பதற்கே CM ஸ்டாலினுக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் அனைத்து பிரச்னைகளையும் எப்படி அவர் தீர்ப்பார் என்றும் EPS கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முகாமில் மக்கள் அளிக்கும் மனுக்களை அதிகாரிகள் ஆற்றில் வீசி அலட்சியம் செய்வதாகவும் EPS சாடினார்.
Similar News
News January 13, 2026
பொங்கல் பண்டிகை.. மது பிரியர்களுக்கு அதிர்ச்சி

பொங்கல் பண்டிகைக்கு, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பதாக The New Indian Express செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது CM குடும்பமோ, அமைச்சர்கள் குடும்பமோ அல்ல; அப்பாவி பொதுமக்களின் குடும்பங்கள் மட்டுமே; பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதல்வருக்கு அருவருப்பாக இல்லையா என்று காட்டமாக சாடியுள்ளார்.
News January 13, 2026
ஜீவனாம்சமாக ₹15,000 கோடி கொடுக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஜீவனாம்சமாக ₹15,000 கோடியை அளிக்கவுள்ளார். கலிபோர்னிய நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்திய தொழிலதிபர் ஒருவரின் Costliest விவாகரத்து என கூறப்படும் இது, உலகளவில் 4-வது மிக காஸ்ட்லியான விவாகரத்தாம். 1993-ல் பரிமளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்த ஸ்ரீதர் வேம்புக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
சற்றுமுன்: ஒரு கிலோ விலை ₹2,92,000

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று, ஒருகிராம் வெள்ளியின் விலை ₹5 உயர்ந்து ₹292-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 உயர்ந்து ₹2,92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹35,000 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையின் எதிரொலியால், வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


