News September 27, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் கார்டு குறித்து முக்கிய அப்டேட்!

கிருஷ்ணகிரி மக்களே! வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!
Similar News
News February 18, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.18) நீர்மட்டம் 49.9 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
News February 18, 2026
ஓசூர்: கணவனின் தகாத உறவு; மனைவி தற்கொலை!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பப்புலு ஹேமாராம். இவருடைய மனைவி குஸ்தூல்(32). இவர் ஓசூர் தேர்பேட்டை பிள்ளையார் தெருவில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் குஸ்தூல் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருடைய கள்ளக்காதலியுடன் ஓடி விட்டார். இதில் மன உடைந்த குஸ்தூல் 15-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News February 18, 2026
கிருஷ்ணகிரி: 5 பேருக்கு கொடூர கத்தி குத்து!

காவேரிப்பட்டணத்தில் மயானக் கொள்ளை விழாவில் சாந்தபுரத்தை சோ்ந்த பிரசாந்த் மற்றும் நண்பா்கள் வீரப்பன் படத்துடன் டி-சா்ட் அணிந்து வந்தனா். இவர்களை திமுக ஒன்றிய செயலாளர் மகன் ஆகாஷ் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தகராறில் ஆகாஷ் தரப்பினர் பிரசாந்த் உட்பட 5 பேரை கத்தியால் சரமாரியாக குத்தினர். காயம் அடைந்த 6 பெரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


