News September 27, 2025
₹1999 EMI-யில் கார் லோன்: மாருதி சுசுகியின் புதிய திட்டம்

GST வரி சீர்திருத்தத்தால் கார்களின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எளிதான கார் கடன் திட்டத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக மாருதி சுசுகியின் முதல்நிலை செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 1000க்கு 34 பேர் மட்டுமே கார் வைத்துள்ளனர். இன்னும் நிறைய பேர் கார் வாங்க வேண்டும் என்பதற்காக மாதம் ₹1999 EMI செலுத்தும் வகையில் கார் கடன் வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
Similar News
News September 27, 2025
உங்களுக்கு எந்த சத்து தேவை? PHOTOS

உடல் ஆரோக்கியம், பலத்துக்கு வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகள் அவசியம். உணவின் மூலம் அவற்றை பெற முடியாத நிலை இருந்தால், அவற்றை மாத்திரை வடிவில் (சப்ளிமென்ட்ஸ்) எடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த சப்ளிமென்ட், எதற்கு தேவை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஸ்வைப் செய்து பாருங்கள். டாக்டரின் ஆலோசனையை பெற்றே, இவற்றை உட்கொள்ள வேண்டும். இல்லையெனில், உடலுக்கு பாதிப்பு ஏற்படும். எச்சரிக்கை!
News September 27, 2025
30,000 கிராமங்களில் BSNL 4ஜி சேவை: PM மோடி

நாடு முழுவதும் BSNL 4ஜி சேவையை PM மோடி தொடங்கி வைத்தார். 100% 4ஜி சேவையை வழங்கும் பொருட்டு 30,000 கிராமங்களில் புதிதாக 97,500 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவையை தொடங்கிய முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளதாகவும், தொலைத்தொடர்பு உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருவதாகவும் PM மோடி கூறினார்.
News September 27, 2025
இந்த மீன்களை பார்த்து இருக்கீங்களா? AMAZING PHOTOS

கோடானுக்கோடி அற்புதங்களை கொண்டது கடலில் வாழும் மீன்களின் அழகு, கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அவற்றில் பார்க்க சலிக்காத சில மீன்களின் பட்டியலை கொடுத்துள்ளோம்: 1)ரெட் கிரவுன் டெய்ல் 2)மாண்டரின் மீன் 3)டிஸ்கஸ் 4)எம்பரர் ஏஞ்சல் 5)மூரிஷ் ஐடல் 6)ரெயின்போ பேரட் 7)பீகாக் சிச்லிட் 8)க்ரவுண் டெய்ல் பேட்டா 9)ரீகல் டாங். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பார்த்து உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.