News September 27, 2025
மாசம் ₹210 முதலீட்டில் ₹5,000 பென்ஷன் தரும் திட்டம்!

மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் மாதம் ₹42-யை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதம் ₹1,000 கிடைக்கும். மாதம் ₹210 முதலீடு செய்தால், மாதம் ₹5,000 கிடைக்கும். 18- 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தது 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். இதனை நண்பர்களுக்கு பகிருங்கள்.
Similar News
News September 27, 2025
இந்த மீன்களை பார்த்து இருக்கீங்களா? AMAZING PHOTOS

கோடானுக்கோடி அற்புதங்களை கொண்டது கடலில் வாழும் மீன்களின் அழகு, கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அவற்றில் பார்க்க சலிக்காத சில மீன்களின் பட்டியலை கொடுத்துள்ளோம்: 1)ரெட் கிரவுன் டெய்ல் 2)மாண்டரின் மீன் 3)டிஸ்கஸ் 4)எம்பரர் ஏஞ்சல் 5)மூரிஷ் ஐடல் 6)ரெயின்போ பேரட் 7)பீகாக் சிச்லிட் 8)க்ரவுண் டெய்ல் பேட்டா 9)ரீகல் டாங். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பார்த்து உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.
News September 27, 2025
கிட்னி திருட்டை கையில் எடுத்த விஜய்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ பாடலுடன் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். எடுத்தவுடனே திமுக MLA-வின் மருத்துவமனையில் கிட்னி திருடப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், 2026-ல் தவெக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி திருட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரப்படும் என்றார்.
News September 27, 2025
வடிவேலு பாணியில் விஜய்.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

‘சுறா’ படத்தில் படகு போட்டிக்கு கிளம்பும் வடிவேலு, ஆரத்தி, ஆட்டம் பாட்டம் என்று சுற்றி போட்டி நடக்கும் இடத்துக்கு வருவதற்குள், போட்டியே முடிந்துவிடும். இன்று விஜய் லேட்டாக பிரசாரத்துக்கு வருவதை இந்த சீனுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். காலை 8:45 மணிக்கு பிரசாரம் ஆரம்பிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 2:45 மணிக்கு தான் பிரசார இடத்திற்கு விஜய் வந்தார்.