News September 27, 2025
நாகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ மாணவியர் https://scholarships.gov.in இணையத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார்.
Similar News
News January 14, 2026
நாகை; வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

நாகை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
நாகை: ரயில் சேவை வழக்கம் போல இயங்கும்!

இரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஜன.14-ம் தேதி, பகுதி அளவு நிறுத்தப்படுவதாக இருந்த திருச்சி – நாகை – காரைக்கால் டெமு ரயில் மற்றும் காரைக்கால்- நாகை – திருச்சி டெமு ரயில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல இயங்கும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வரும் ஜன.20-ம் தேதி பொதுமக்களுக்கான குரல் ஒப்புவித்தல் போட்டி , குரல் சார்ந்த ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. குரல் ஒப்புவித்தல் போட்டியில், ஒப்புவித்த குறள்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் 8754828470 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


