News September 27, 2025
கடலூர் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW !
Similar News
News February 6, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, இணையவழி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டையுடன் https://application.tnbocw.com/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
கடலூர்: சிறுமி கர்ப்பம்; சிறுவன் மீது வழக்கு!

ரெட்டிச்சாவடியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனும், 17 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் நெருங்கி பழகியதில், சிறுமி கருவுற்றார். இதையறிந்த சிறுவனின் தாய் அச்சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த தாய் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
News February 6, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.05) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.06) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


