News September 27, 2025
கோவையிலிருந்து கூடுதலாக 110 பேருந்துகள் இயக்கம்!

கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையொட்டி சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து இன்றும், நாளையும் இரண்டு நாட்களும் மற்றும் 30ஆம் தேதியும் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 110 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 26, 2026
கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று தீவிர பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் பயணிகளின் உடைமைகள், பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்கள் மற்றும் ரயில் தண்டவாளப் பாதைகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
News January 26, 2026
கோவையில் வைரல் ஆகும் பேனர்!

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.