News September 27, 2025
கம்பம் அருகே விபத்து பைக் மீது கார் மோதி இருவர் படுகாயம்

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சேக்மைதீன், முகமது இப்ராகிம் ஆகியோர் அவர்களது பைக்கில் நேற்று (செப்.26) கம்பம் நோக்கி சென்றுள்ளனர். அப்பொழுது எதிர் திசையில் ராஜேந்திரன் என்பவர் ஒட்டி வந்த கார் இவர்களது பைக் மீது மோதியது இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 10, 2026
ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது!

ஆண்டிபட்டி குமாரபுரம் மயானம் அருகே சார்பு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதித்தபோது, அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் (Tapentadol) இருப்பது தெரிந்தது. விசாரணையில் என்ஜிஓ நகர் அமர்தராஜ் மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி ராம்குமார் என்பது உறுதியானது. ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி லாபத்திற்காக விற்பனை செய்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்
News February 10, 2026
தேனி பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

தேனி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 04546-254368 . SHARE பண்ணுங்க!
News February 10, 2026
பணி நியமன புகாரில் டி.இ.ஓ ஆஜராக உத்தரவு

தேனி சி.இ.ஓ அலுவலகத்தில் இன்று (பிப்.10) தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நாகலட்சுமி அவரது நிர்வாக வரம்பில் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் பற்றி நேரடி விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையில் நாகலட்சுமி, நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும். டி.இ.ஓ. வாக பொறுப்பேற்ற 2024 அக்.10க்கு பின் கையாளப்பட்ட பணிநியமன கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


