News September 27, 2025
பெ.சண்முகம் அரசு ஹாஸ்பிடலில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இன்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர்.
Similar News
News January 12, 2026
நேந்திரம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

நேந்திர வாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால், வாரத்தில் 4 நாள்களாவது சாப்பிடுவது, பின்வரும் நன்மைகளை தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்குகிறது *உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது *ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்தை பாதுகாக்கிறது *எலும்புகளை வலுப்படுத்துகிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.
News January 12, 2026
முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மனைவி மறைவுக்கு CM மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வத்சலா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத நிலையில், தொலைபேசி மூலம் அழகிரியை தொடர்பு கொண்டு தனது இரங்கலை கூறியுள்ளார். இதற்கிடையில், திமுக நிர்வாகிகள், விசிக ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
News January 12, 2026
பொங்கலுக்கு அடுத்த ஜாக்பாட்.. பெண்களுக்கு HAPPY NEWS

பொங்கலுக்குள் பெண்களுக்கு அடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாக இருப்பதாக <<18826786>>ஐ.பெரியசாமி<<>> நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், 2026 தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்த ஜாக்பாட் அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் 3 நாள்களே இருப்பதால், நாளை அல்லது நாளை மறுநாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


