News September 27, 2025
RECIPE: கருப்பு கவுனி லட்டு செஞ்சி பாருங்க..

மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசியில் லட்டு செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் ✦கருப்பு கவுனி அரிசியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கவும் ✦ இதனை, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் ✦மாவிற்கேற்ப தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேக வைக்கவும் ✦வெல்லத்தை பாகாக காய்ச்சி, மாவில் சேர்க்கவும் ✦பிறகு, இதனை இறக்கி, சூடு ஆறிய பிறகு சிறு சிறு லட்டுகளாக பிடிக்கவும். SHARE.
Similar News
News January 23, 2026
100 நாள் வேலை திட்டம்.. இன்று சிறப்பு தீர்மானம்

சட்டப்பேரவையில் நேற்று,100 நாள் வேலையை 150 நாள்களாக உயர்த்தப்படும் என கொடுத்த தேர்தல் வாக்குறுதியை செய்தீர்களா? என EPS எழுப்பிய கேள்விக்கு, ஆமாம் அது உண்மைதான், ஆனால் அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று CM ஸ்டாலின் பதிலளித்தார். இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜன. 23) சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
News January 23, 2026
தங்கம் விலை தலைகீழாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிக அளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $118.55 உயர்ந்து $4,953.03-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $4.04 உயர்ந்து $96.84 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் நேற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை இன்று (ஜன.23) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 23, 2026
கோயிலில் இருந்து வரும்போது இவற்றை பிறருக்கு தராதீங்க

கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது, இந்த பொருள்களை பிறருக்கு கொடுத்தால், வீட்டிற்கு வரும் தெய்வம் வெளியேறிவிடும் என்பது ஐதிகம். பிரசாதமாக கொடுக்கும் பொருள்கள், அதாவது எலுமிச்சை பழம், பூ, மாலை போன்றவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது. மேலும், கோயிலுக்கு சென்று திரும்பும் போது, யாருக்கும் எந்த தானமும் வழங்கக்கூடாதாம். அதே நேரத்தில், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை பிறருக்கு வழங்கலாம்.


