News September 27, 2025
BREAKING: ₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News September 27, 2025
BREAKING: ஓபிஎஸ், TTV-க்கு அழைப்பு.. புதிய திருப்பம்

கூட்டணியில் இணைய TTV, OPS-க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தினகரனை BJP தலைவர்கள் சந்திப்பது நல்லதுதான்; விரைவில் நல்ல முடிவு வரும் எனக் கூறிய அவர், நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம், தேவைப்பட்டால் நானும் டிடிவியை சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். நேற்று OPS – TTV சந்தித்து பேசியிருந்த நிலையில், நயினார் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
News September 27, 2025
உலகின் டாப்-10 பட்டியலில் மாருதி

சந்தை மதிப்பு அடிப்படையில் உலகின் டாப்-10 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மாருதி சுசுகி 8-வது இடம்பிடித்துள்ளது. தற்போது தங்கள் சந்தை மதிப்பு ₹5,10,730 கோடியாக ($57.6 billion) உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களை மாருதி பின்னுக்கு தள்ளியுள்ளது. புதிய GST, பண்டிகைக்கால விற்பனைகள் உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
News September 27, 2025
ஏன் ஹாஸ்பிடல் சென்றாலே நாக்கை நீட்ட சொல்றாங்க?

எந்த பிரச்னைக்கு ஹாஸ்பிடல் சென்றாலும், டாக்டர்கள் முதலில் ‘நாக்கை நீட்டுங்க’ என்பார்கள். அது ஏன் என யோசித்தது உண்டா? ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை நாக்கை வைத்தே கண்டறியலாம் ◆நீரிழப்பு ஏற்பட்டால், நாக்கு மஞ்சளாக இருக்கும் ◆உடலில் ரத்த சோகை இருந்தால், நாக்கு வறண்டு போயிருக்கும் ◆நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், நாக்கு வெள்ளையாக மாறும் ◆தைராய்டு இருந்தால், நாக்கு கொஞ்சம் தடித்து காணப்படும். SHARE.