News September 27, 2025
விழுப்புரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நாளை(செப்.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விழுப்புரம் சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன், அரவிந்த் கண் மருத்துவமனை & விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 89வது தொடர் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கண் சம்பந்தமாக பல்வேறு பரிசோதனை நடத்தப்பட உள்ளதால் பொதுமக்கள், பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
விழுப்புரம்:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

விழுப்புரம் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*திருவாமாத்தூர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோவில்
*திருநாவலூரில் உள்ள ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் ஆலயம்
*மயிலம் முருகன் கோயில்
*மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
விழுப்புரம்: சமத்துவ பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் அருணாபுரம் ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நடைபெற்றது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (ஜன.14) நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News January 14, 2026
விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


