News September 27, 2025
சிவகங்கை: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

சிங்கம்புணரியை சேர்ந்த அஜித்குமார். கடந்த 2020ம் ஆண்டு 16வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இந்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் அஜித்குமாரை கைது செய்து, வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News January 11, 2026
சிவகங்கை: பாதயாத்திரை சென்ற பெண் பரிதாப பலி

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே ஒரு குழுவினர் நேற்று முன்தினம் பழனிக்கு பாதயாத்தரை சென்றனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் இந்த குழுவினர் மீது மோதியது. இந்த விபத்தில் பரமக்குடி பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா (35) என்ற பெண் படுகாயமடைந்தார். அவர் மதுரை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 11, 2026
சிவகங்கை: பெண்கள் நிலம் வாங்க கலெக்டர் அழைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பெண் விவசாயிகள் தாட்கோ சாா்பில் வழங்கும் நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா்கள் நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவா்சிஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. எனவே பெண்கள் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணு


