News September 27, 2025

விருதுநகர்: நாளை TNPSC தேர்வு., 19,083 பேர் தயார்!

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டங்களில் 63 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகள் நாளை காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் 19,083 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தேவர்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Similar News

News January 12, 2026

சிவகாசி: பொங்கல் தொகை கேட்ட 2 பேருக்கு வெட்டு

image

சிவகாசி தட்டாவூரணியை சேர்ந்தவர்கள் பாலகுரு – முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களது முத்த மகன் சிதம்பரம் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.3000 வாங்கி அதனை தாயிடம் கொடுக்காமல் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரத்திடம் அவரது தம்பிகள் சுப்பிரமணி, அருண்குமார் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் தனது தம்பிகள் 2 பேரை கத்தியால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 12, 2026

விருதுநகர்: பிரபல ரவுடி ஆஜராக உத்தரவு

image

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்த அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(32) 2021-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், சதீஷ் குமார் உள்ளிட்ட 7 பேரும் ஜன.29 அன்று ஆஜராக நீதிபதி வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

News January 12, 2026

ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!