News September 27, 2025

BREAKING: தங்கம் விலை Record படைத்தது.. இது முதல்முறை

image

தங்கம் விலை மீண்டும் ₹85 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹10,640-க்கும், 1 சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் மதிப்பு உயர்வால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 27, 2025

புயல் சின்னம்: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News September 27, 2025

திடீர்’னு பெட்ரோல் காலியா? Fuel@Call ஆப் யூஸ் பண்ணுங்க!

image

ஆள் அரவமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். வெறுப்பேற்றும் இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கு இருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

News September 27, 2025

இனி டைரக்டர் வரலட்சுமி.. வெளியான அறிவிப்பு!

image

திரையில் ஹீரோயினாக வசீகரித்து, வில்லியாக மிரட்டிய வரலட்சுமி சரத்குமார், தற்போது மற்றொரு பரிணாமத்தில் ஈர்க்கவுள்ளார். தோசா டைரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘சரஸ்வதி’ என்ற படத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமியுடன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

error: Content is protected !!