News September 27, 2025

செங்கல்பட்டு: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

image

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>LINK-ஐ கிளிக்<<>> செய்து, வரும் அக்.07-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். B.E முடித்துவிட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 14, 2026

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் போகி வாழ்த்துக்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (14.01.2026) இனிய போகித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பழையன கழிந்து புதியன புகும் இந்நாளில், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News January 14, 2026

செங்கை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

செங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 14, 2026

செங்கை: பசு மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!