News September 27, 2025

நீலகிரி: உங்கள் கரண்ட் BILL அதிகமா வருதா ?

image

நீலகிரி மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம்;<>www.pmsuryaghar.gov.in <<>>என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்; இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் ராதகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். SHARE பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

குன்னூரில் வெளுத்த மழை

image

குன்னூர் டானிங்டன் பிரிட்ஜ் சாலை, அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்குள்ள வீட்டின் மதில் சுவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், அப்பகுதியில் விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)

News January 13, 2026

பொங்கல் பரிசு: நீலகிரி மக்களே உஷார்

image

நீலகிரி மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!