News April 13, 2024

காங்.கட்சி தேசிய தலைவர் வருகையொட்டி ஆலோசனை

image

புதுச்சேரி மக்களவை வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே 15 ஆம் தேதி புதுவை வருகிறார். அதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு பணி குறித்து முன்னாள் துணை சபாநாயகர் பாலன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது.

Similar News

News August 9, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News August 8, 2025

புதுவை: மாணவர்களுக்கு பருவ நிலா கருத்தரங்கம்

image

புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகமும் மயூரி சித்திர நாட்டியாலயாவும் இணைந்து நடத்திய பருவ நிலாக் கருத்தரங்கம் அரியாங்குப்பம் முத்தமிழ்க் கலை இல்லத்தில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் முனைவர் இராச.குழந்தைவேலனார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய விருதாளர் மண்ணாங்கட்டி மொழி வாழ்த்து வழங்கினார். இதில் தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார்.

News August 8, 2025

புதுவை: எக்ஸ்போ பொருட்காட்சி திறந்து வைப்பு

image

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறும் தினமலர் எக்ஸ்போ பொருட்காட்சியினை இன்று (ஆகஸ்ட் 8) வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சர் என் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் பொதுப்பணித்துறை அமைச்சர் க லட்சுமிநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொருட்காட்சியினை திறந்து வைத்தனர்.

error: Content is protected !!