News September 27, 2025
சேலத்தில் ஜார்க்கண்ட் கொள்ளை கும்பல் கைது!

சேலம் ரயில்வே கோட்டப் பகுதிகளில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை ஆர்பிஎஃப் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 6, 2026
சேலத்தில் லட்ச கணக்கில் பண மோசடி! ALERT

சேலம் ஆத்தூர் அருகே பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற மின்னஞ்சல் லிங்க்கை நம்பி, தனியார் பள்ளி ஆசிரியர் செல்வம் தவணை முறையில் ₹6.46 லட்சத்தை இழந்துள்ளார். மீண்டும் பணம் கேட்கப்பட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 6, 2026
வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் ஆட்சியர்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் விருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூகம் ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தர்ப்பூசணி ரசாயனம் கொண்டு பழுக்க வைத்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் அரசு விஞ்ஞானிகளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டு தெளிவு படுத்தி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
News February 6, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 7ம் தேதி அம்மாபேட்டை பாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஓமலூர் அரசு வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்வும். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்


