News April 13, 2024
ராகுகாலம் பார்க்காமல் வேட்புமனு செய்தது உண்டா?

ராகு காலம் பார்க்காமல் எந்தவொரு திமுக வேட்பாளராவது வேட்புமனு தாக்கல் செய்தது உண்டா? என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த தமிழிசை, இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?, தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனவும் கடுமையான சாடியுள்ளார்.
Similar News
News January 12, 2026
சிங்கம் வாயில் மாட்டிக்கொண்ட விஜய்: செல்வப்பெருந்தகை

விஜய் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காகவே CBI-ஐ வைத்து பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்ற பேச்சு நிலவுகிறது . இந்நிலையில், சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொள்வது போல சிபிஐ வலையில் விஜய் சிக்கியிருக்கிறார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். CBI-ஐ பாஜக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், அதை பயன்படுத்திதான் பாஜக விஜய்யை டெல்லிக்கு அழைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
News January 12, 2026
இன்று முதல் புது ரூல்ஸ்.. உடனே போனில் மாற்றுங்க

இன்று (ஜனவரி 12) முதல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று புதிய ரூல்ஸ் அமலுக்கு வந்துள்ளது. IRCTC கணக்குடன் இதுவரை ஆதாரை இணைக்காதவர்கள், உங்கள் போனில் இருக்கும் முன்பதிவு ஆப்பிலேயே ஆதாரை அப்டேட் செய்யலாம். ஆதாரை இணைக்கவில்லை எனில், டிக்கெட் புக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
ஹாஸ்பிடல் கொலைக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில், உயிர்காக்கும் ஹாஸ்பிடல்கள் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக மாறும் அளவுக்கு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். TN-யையும், TN மக்களையும் காப்பாற்ற ஒரே வழி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


