News September 27, 2025
ஈரோடு: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. அவ்வாறு எடுத்தால், புகைப்படங்களை பதிவுசெய்து அதனை ஆபாசமாக மாற்றி மிரட்டும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்தது. இதன் மூலம் மோசடிகள் பணம் பறிக்கக்கூடிய அபாயம் அதிகம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News January 14, 2026
பவானி அருகே விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

பவானி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (66). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்ற முன்தினம் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 14, 2026
அந்தியூரில் சேவல் சூதாட்டம்: 4 பேர் கைது

அந்தியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான காவல்துறையினர் பெருமாபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விமல், இளவரசன், கணேசன், கதிரேசன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 14, 2026
நஞ்சை ஊத்துக்குளி: மயங்கி விழுந்தவர் பலி

கொடுமுடியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (65). இவர் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் ஆலையில் விறகு லோடு இறக்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


