News September 27, 2025
நாகையில் நாளை மாரத்தான் போட்டி

நாகையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தொடங்கி கங்களாஞ்சேரி சாலையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். SHARE பண்ணுங்க
Similar News
News September 27, 2025
நாகை: இனி பட்டா விவரம் அறிவது எளிது!

நாகை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News September 27, 2025
நாகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ மாணவியர் https://scholarships.gov.in இணையத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார்.
News September 27, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வரும் அக்.5 (ஞாயிறு), அக்.6 (திங்கள்), அக்.7 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.