News September 27, 2025
ஆஸ்துமா பிரச்னைக்கு இந்த மூலிகை தேநீரை குடிங்க!

சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் கல்யாண முருங்கை இலை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➥கல்யாண முருங்கை இலைகளை கழுவி, சிறு சிறு பொடியாக நறுக்கவும் ➥தண்ணீரில் இவை, 3- 5 நிமிடங்கள் வரை நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி கொள்ளவும் ➥சுவைக்காக சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவையான கல்யாண முருங்கை தேநீர் ரெடி. SHARE IT.
Similar News
News September 27, 2025
அபிமன்யு ஈஸ்வரன் என்ன தவறு செய்தார்?

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அபிமன்யு ஈஸ்வரன் நீக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. AUS, ENG-க்கு எதிரான டெஸ்ட் தொடர்களில், அவருக்கு பிளேயிங் 11-ல் ஒரு முறை கூட வாய்ப்பளிக்காமல் WI-க்கு எதிரான தொடரில் இருந்து நீக்கியது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். FC கிரிக்கெட்டில் 7,885 ரன்கள் அடித்த அவரை தேர்வுக்குழு அலட்சியப்படுத்துவதாகவும் ரசிகர்கள் சாடுகின்றனர்.
News September 27, 2025
தமிழகத்தில் கல்வித்துறை சீரழிந்து விட்டது: அன்புமணி

தமிழகத்தில் கல்வித்துறை சீரழிந்து விட்டதாக அன்புமணி விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக கல்விக்கான நிதியை 3 மடங்கு உயர்த்தவில்லை என்றும், 100 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை எனவும் சாடியுள்ளார். அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் போட்டி போடும் காலம் மாறி, தற்போது 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 27, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹6000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹6 உயர்ந்து ₹159-க்கும், கிலோ வெள்ளி ₹6000 உயர்ந்து ₹159,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ₹6 ஆயிரம் உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 2 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹9 ஆயிரம் அதிகரித்துள்ளது.