News September 27, 2025
சேலம் அருகே விபத்து 50 பேர் காயம்!

சேலம்: கொளத்தூர் அருகே உள்ள கண்ணாமூச்சி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்து மாலை சரக்கு வேனில் வீடு திரும்பினர். மூலப்பனங்காடு அருகே அந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் சென்ற 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
Similar News
News January 12, 2026
சேலம்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 12, 2026
சேலத்தில் பெண் சரமாரியாக வெட்டிக் கொலை!

சேலம் ஜான்சன் பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (67). தனது மகனை பழிவாங்க வந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற போராடிய அவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
News January 12, 2026
சேலம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)


