News September 27, 2025

Sports Roundup : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

image

*பார்வையற்றோர் கால்பந்து போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. *ஜப்பான் ஓபன் டென்னிஸில் ரோகன் போபண்ணா டகேரு யூசுகி இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஜூனியர் மகளிர் ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம் 3-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. *ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 10மீ ஏர் பிஸ்டலில் இந்தியாவின் 16 வயதான ஜோனாதன் ஆண்டனி தங்கம் வென்று அசத்தல்.

Similar News

News September 27, 2025

மாசம் ₹210 முதலீட்டில் ₹5,000 பென்ஷன் தரும் திட்டம்!

image

மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் மாதம் ₹42-யை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதம் ₹1,000 கிடைக்கும். மாதம் ₹210 முதலீடு செய்தால், மாதம் ₹5,000 கிடைக்கும். 18- 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தது 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். இதனை நண்பர்களுக்கு பகிருங்கள்.

News September 27, 2025

குரூப் 4: 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

image

ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், தற்போது கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 4,662ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 11.38 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 27, 2025

அக்.5 முதல் வீடுகளுக்கே வரும் ரேஷன் பொருள்கள்

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5, 6 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நாள்களுக்கு பிறகும் விநியோகத்திற்கான தேவை இருப்பின் கள நிலவரத்தை பொறுத்து தேதியை திட்டமிட வேண்டும். வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் நாள்களை நியாயவிலைக் கடைகளில் எழுதி விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!