News September 27, 2025
நகத்தில் இப்படி இருக்கா.. கவனியுங்க!

ஒருவரின் கை நகத்தின் கலரை வைத்தே அவரின் ஹெல்த் பற்றி சொல்லிவிடலாம் தெரியுமா? ✦நகத்தின் நடுவில் வெள்ளை : கல்லீரல் பிரச்னை ✦கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயாக இருக்கலாம் ✦மஞ்சள் நிறம்: தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு ✦வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது. ✦ஆரோக்கியமான நகங்கள் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும். SHARE.
Similar News
News September 27, 2025
அக்.5 முதல் வீடுகளுக்கே வரும் ரேஷன் பொருள்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5, 6 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நாள்களுக்கு பிறகும் விநியோகத்திற்கான தேவை இருப்பின் கள நிலவரத்தை பொறுத்து தேதியை திட்டமிட வேண்டும். வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் நாள்களை நியாயவிலைக் கடைகளில் எழுதி விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
News September 27, 2025
சற்றுமுன்: விஜய்யை பார்க்க விபரீத செயல்

விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக தொண்டர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை போலி அடையாள அட்டையுடன் திருச்சி விமான நிலையத்திற்குள் தவெக தொண்டர் புகுந்துள்ளார். அவரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். பின், விஜய்யை பார்ப்பதற்காக இப்படி செய்ததாக அவர் கூறியதை அடுத்து, கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டார்.
News September 27, 2025
பெ.சண்முகம் அரசு ஹாஸ்பிடலில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இன்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர்.