News September 27, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று(செப்.27) கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.111 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை ரூ.123 ஆக இருந்த நிலையில், நேற்று(செப்.26) நடந்த கூட்டத்தில் ரூ.12 குறைக்கப்பட்டது. சந்தையில் இதன் விலை ரூ.130 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. இதனால், பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முட்டைக் கோழி விலை ரூ.107 ஆக உள்ளது.

Similar News

News November 1, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவின் மூலம் யோகா பயிற்சியாளர் தேர்வானது வரும் 03.11.2025 மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 74017-03492 தொடர்பு கொள்ளலாம்.

News November 1, 2025

நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர்!

image

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சுமன் அவர்கள் வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதலாகி சென்று விட்ட நிலையில், நாமக்கல் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக இன்று 31.10.2025 பொறுப்பேற்றுக் கொண்ட சரவணன் அவர்களை வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News November 1, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.31 நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி – 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!