News April 13, 2024
ரூ.1000 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட தங்க கட்டிகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,000 கோடிக்கும் மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News August 14, 2025
ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் காலமானார்

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை வெஸ் பயஸ் (80) காலமானார். இவர், 1972 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் ஆவார். உடல்நலக் குறைவு & வயது மூப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வீரேன் ரஷ்குயின்ஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News August 14, 2025
தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா? இபிஎஸ் காட்டம்

ரிப்பன் மாளிகை வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்ததற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். யார் அவர்கள், சமூக விரோதிகளா, குண்டர்களா, நக்சலைட்டுகளா என்றும் தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை என்று சாடினார்.
News August 14, 2025
சஞ்சு வேணும்… ஆனாலும் RRக்கு NO சொன்ன CSK!

சஞ்சு சாம்சனுக்கு பதில் CSK-வில் இருந்து ஜடேஜா, ருதுராஜ் அல்லது ஷிவம் துபேவை தருமாறு <<17395146>>ராஜஸ்தான் கேட்டதாக <<>>தகவல் வெளியானது. சஞ்சு சாம்சனை வாங்குவதில் CSK தீவிரமாக இருந்தாலும், தங்களது அணிக்கு தூண்களாக இருக்கும் மூவரில் ஒருவரை கூட விட்டுக்கொடுக்க விரும்பவில்லையாம். சென்னை ஒத்துவராத நிலையில் வேறு சில அணிகள் சஞ்சுவை வாங்க முயற்சித்து வருகின்றனவாம். சஞ்சு வேறு எந்த அணிக்கு போக வாய்ப்பிருக்கு?