News September 27, 2025
விழுப்புரம் மக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விதிமுறைகளை மீறி, மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என மின்சாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங்கார சீரியல் விளக்குகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கக் கூடாது. மின் குறைகளுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
திண்டிவனத்தில் இருவர் அதிரடி கைது!

திண்டிவனம் சந்தைமேடு கூட்டுரோட்டில் ரோஷணை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 லாரிகளைச் சோதனையிட்டதில், மொத்தம் 330 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின. இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் நடராஜன் (48) மற்றும் சிற்றரசன் (49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த்தனர்.
News January 12, 2026
விழுப்புரம்: வேன் கவிழ்ந்து விபத்து

கோட்டகுப்பம் அருகே ECR சாலையில் நேற்று வேன் மோதி கம்பிகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி கம்பிகளை ஏற்றிச் சென்ற வேன் சின்ன முதலியார் சாவடி அருகே நின்று கொண்டு இருந்த டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் டிரைவர்கள் தப்பித்தனர். கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 12, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


