News September 27, 2025

நெல்லையில் தீயணைப்பு ஊழியர் உயிரிழப்பு

image

வி எம் சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலர் லட்சுமணன். கடந்த 2 நாட்களுக்கு முன் லட்சுமணன் வீட்டில் கால் வழக்கி விழுந்து மயங்கி உள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லட்சுமணன் உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் விசாரணை

Similar News

News February 18, 2026

திருநெல்வேலி: வீடு புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

image

நெடுவிளையைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி தனஷ்(23). இவர் பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது ‘மழை கோட்’ அணிந்து வந்த பெண் ஒருவர் தனஷ் முகத்தை துணியால் மூடி அவரை அரிவாளால் வெட்டி விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 18, 2026

திருநெல்வேலி: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா?

image

TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க.

தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க. யூஸ் ஆகட்டும் 🙂

News February 18, 2026

திருநெல்வேலி: இளம்பெண் குண்டாஸில் கைது

image

பேட்டையைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சரித்திர பதிவேடு குற்றவாளியான சரண்யா(28). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். எனவே கலெக்டர் சுகுமார் உத்தரவில் நேற்று சரண்யா தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!