News September 27, 2025
கள்ளக்குறிச்சி: 14 SI-க்கள் அதிரடி மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 14 உதவி ஆய்வாளர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் நேற்று உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த விஜயராகவன் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பரிமளா சின்னசேலம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
Similar News
News January 13, 2026
கள்ளக்குறிச்சி:ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சாதனை வாழ்த்து துண்டு பிரசுரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் நல்வாழ்த்துகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு சாதனை வாழ்த்து துண்டு பிரசுரத்தினை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.13) மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News January 13, 2026
குறள் வார விழாவையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி (ஜன.09) கள்ளக்குறிச்சி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கு
பெற்ற குறள் வினாடி வினாவிற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.13) திருக்குறள் புத்தகம் மற்றும் கேடயங்களை
வழங்கினார்.


