News September 27, 2025
விருதுநகர்: மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், அறிஞர் அண்ணா விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பங்குபெற விரும்பும் மாணவ/மாணவியர்கள் தங்களின் பெயரை மாவட்ட விளையாட்டரங்கில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News January 12, 2026
விருதுநகர்: அரசு பேருந்து விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி(54). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழகாபுரி முக்கு ரோட்டில் சென்றபோது ராஜபாளையம் சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News January 12, 2026
சிவகாசி: பொங்கல் தொகை கேட்ட 2 பேருக்கு வெட்டு

சிவகாசி தட்டாவூரணியை சேர்ந்தவர்கள் பாலகுரு – முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களது முத்த மகன் சிதம்பரம் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.3000 வாங்கி அதனை தாயிடம் கொடுக்காமல் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரத்திடம் அவரது தம்பிகள் சுப்பிரமணி, அருண்குமார் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் தனது தம்பிகள் 2 பேரை கத்தியால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 12, 2026
விருதுநகர்: பிரபல ரவுடி ஆஜராக உத்தரவு

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்த அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(32) 2021-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், சதீஷ் குமார் உள்ளிட்ட 7 பேரும் ஜன.29 அன்று ஆஜராக நீதிபதி வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.


