News September 27, 2025
கோவையில் ரேபிஸ் பரவலா? உண்மை என்ன!

கோவை மாவட்டத்தில் 25 தெருநாய்களுக்கு ‘ரேபிஸ்’ (Rabies) நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இது குறித்து கோவை மாநகராட்சியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி முழுவதுமாகப் போலியானது ஆகும்.நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தனர்.SHAREit
Similar News
News September 27, 2025
கோவை: உளவுத்துறையில் வேலை நாளை கடைசி!

கோவை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் .69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 27, 2025
கோவை: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

கோவை மக்களே வருகிற அக்.1ஆம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
News September 27, 2025
குரூப் 2 தோ்வுகள்: கோவையில் 23,650 போ் எழுதுகின்றனா்

கோவை மாவட்டத்தில் ஞாயிறன்று (செப்.28) நடைபெறவுள்ள குரூப் 2 தோ்வுகளை 23 ஆயிரத்து 650 போ் எழுதுகின்றனா். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு ஆய்வு அலுவலா் வீதம் 82 ஆய்வு அலுவலா்கள் மற்றும் துணை ஆட்சியா் நிலையில் 8 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தேர்வு மையங்களுக்கு செல்லும் சேர்வர்களுக்கு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.