News September 27, 2025
ஆஸி., நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு கெளரவம்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் தேவாவுக்கு அங்குள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்ற தமிழர்கள், அவரை சபாநாயகரின் இருக்கையில் அவரை அமர வைத்து, கையில் செங்கோல் கொடுத்துக் கெளரவித்தனர். தனக்கு கொடுக்கப்பட்ட கௌரவத்தால் தேவா மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
Similar News
News September 27, 2025
பெ.சண்முகம் அரசு ஹாஸ்பிடலில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இன்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர்.
News September 27, 2025
RECIPE: கருப்பு கவுனி லட்டு செஞ்சி பாருங்க..

மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசியில் லட்டு செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் ✦கருப்பு கவுனி அரிசியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கவும் ✦ இதனை, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் ✦மாவிற்கேற்ப தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேக வைக்கவும் ✦வெல்லத்தை பாகாக காய்ச்சி, மாவில் சேர்க்கவும் ✦பிறகு, இதனை இறக்கி, சூடு ஆறிய பிறகு சிறு சிறு லட்டுகளாக பிடிக்கவும். SHARE.
News September 27, 2025
BREAKING: ₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.