News September 27, 2025
இளநீரில் இதை கலந்தால் ஊட்டச்சத்து இரட்டிப்பாகும்!

உடலுக்கு ஆரோக்கியமான இளநீருடன், இந்த 5 பொருள்களை கலந்து குடித்தால் ஊட்டச்சத்து இரட்டிப்பாகும். * இளநீரில் சியா விதைகளை கலந்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும் *தேன் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் * புதினா கலந்தால் புத்துணர்ச்சி அதிகரிக்கும் *எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் PH அளவு சமநிலைப்படும்* கருப்பு உப்பை சேர்த்து குடித்து வந்தால் செரிமான கோளாறு சரியாகும்.
Similar News
News September 27, 2025
TN-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பாஜக

வடமாநிலங்களில் பெண்களை மனிதராகவே மதிக்காத நிலை தொடர்வதாக TRB ராஜா பேசியதற்கு, பாஜகவின் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். TN-ல் கடந்த 2 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்திருப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை 21-வது இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 27, 2025
‘டயங்கரம்’ படத்தின் கதை இது தான்

விஜே சித்து, ஹர்ஷத் கான் நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் கதையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். அப்படம் விஜே சித்துவின் நிஜ வாழ்க்கை கதை என்றும் அவருடைய கல்லூரிப் பயணம், வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு எப்படி உயர்ந்தார் என்பது பற்றி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘டயங்கரம்’ காமெடி கலாட்டா நிறைந்த படமாக இருக்கும் என்றும் பேசினார்.
News September 27, 2025
BREAKING: தங்கம் விலை Record படைத்தது.. இது முதல்முறை

தங்கம் விலை மீண்டும் ₹85 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹10,640-க்கும், 1 சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் மதிப்பு உயர்வால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.