News September 27, 2025
மஞ்சள் நிலவாக ஒளிரும் மாளவிகா மோகனன்

தங்கப்பூவை போல மின்னும் மாளவிகா மோகனனின் சமீபத்திய போட்டோ ஷூட் கண்களை கவர்ந்து இழுக்கின்றன. கேரள பெண்களுக்கே உரிய இயற்கை அழகுடன் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார் மாளவிகா மோகனன். திறமையான நடிப்பால் மலையாளத்தை தாண்டி தமிழிலும் தனி இடம் பிடித்தவர். கண்களால் இதயத்தை கொத்தும் மாளவிகாவின் போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்..
Similar News
News January 22, 2026
வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்

குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் சீராகிறது, மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும், தினமும் காலையில் : எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
News January 22, 2026
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது வரி இல்லை: டிரம்ப்

டிரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விதித்த வரிகள் குறித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். நான் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்து, கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான ஒரு எதிர்கால ஒப்பந்தக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் நல்லது. ஐரோப்பிய நாடுகள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது என்று கூறினார்.
News January 22, 2026
போராட்டம் தொடரும்.. ஆசியர்கள் திட்டவட்டம்

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், தங்களது கோரிக்கையை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முரளி, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


