News September 27, 2025
முதலமைச்சர் பாதுகாப்புக்காக 110 AI கேமராக்கள்

சென்னையில் உள்ள CM ஸ்டாலின் வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 110 AI கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் கமிஷனர் ஆபிஸில் அமைக்கப்படுகிறது. சந்தேகத்துக்குரிய நபர்கள் CM வீட்டருகே சென்றாலோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி சென்றுவிடுமாம்.
Similar News
News September 27, 2025
பரப்புரைக்கு தாமதமாக புறப்பட்ட விஜய்

நாமக்கல், கரூரில் பரப்புரை மேற்கொள்வதற்காக விஜய் விமானத்தில் புறப்பட்டுள்ளார். நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் காலை 8.45 மணிக்கு பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் சற்று முன்னதாக தான் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கிளம்பியுள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார். இதனிடையே, கே.எஸ்.திரையரங்கம் முன்பாக தவெகவினர் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
News September 27, 2025
அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர்

மூத்த பத்திரிக்கையாளர் இரா.ப.சந்திரசேகரன், சமூக ஆர்வலர் சாசா உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதேபோல், பல்வேறு மாற்றுக்கட்சியினரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். குறிப்பாக, கரூர் நகர் காங்கிரஸ் மகளிர் அணி தலைவரை இணைத்த விவகாரத்தில் காங்., திமுக இடையே குழப்பம் எழுந்தது. இதை தவிர்க்க மு.க.ஸ்டாலினே, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விவகாரத்தை நேரடியாக கையில் எடுத்துள்ளாராம்.
News September 27, 2025
ரூபாய் மதிப்பு உயர்வால் தங்கம் விலை குறையுமா?

இந்தியா – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை போன்ற பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ₹88.72ஆக முடிவடைந்தது. இதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் எதிரொலிக்கும். குறிப்பாக, ரூபாய் மதிப்பு உயரும் போது, வெளிநாட்டு நாணயங்களுக்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை குறையும். இதனால், இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.