News September 27, 2025

வரலாற்றில் இன்று

image

1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவி ரயில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1933 – நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்.
1959 – ஜப்பானின், ஒன்சூ தீவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1998 – கூகுள் தேடுபொறி தொடங்கப்பட்ட நாள்.

Similar News

News September 27, 2025

குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு..

image

குரூப் 2, 2ஏ தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வர்கள் முறையாக கடைபிடிக்க TNPSC அறிவுறுத்தியுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்பே வந்துவிட வேண்டும் என்றும், 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் TNPSC கூறியுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு சார்பில் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே சரியான நேரத்திற்கு செல்லவும்.

News September 27, 2025

BREAKING: தமிழகம் முழுவதும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

News September 27, 2025

இன்று முதல் விடுமுறை..

image

காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளும் அக்.5 வரை 9 நாள்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். காலாண்டு விடுமுறை நாள்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!