News September 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 27, புரட்டாசி 11 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்▶பிறை: வளர்பிறை
Similar News
News September 27, 2025
நவராத்திரி 6-ம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்!

நவராத்திரி 6 ஆம் நாளில் அம்பாள், சண்டிகா தேவி என்னும் ரூபத்துடன் காட்சி அளிக்கிறாள். இன்றைய தினம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா த்வம் ஷங்கர் பிரியா ததா மாம் குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்
பொருள்:
சிவனின் பாதி உடல் கொண்ட பார்வதி தேவியே, நீ சிவனின் பிரியமானவள் போல, எனக்கு விரும்பத்தகுந்த கணவனை அருள வேண்டும். SHARE.
News September 27, 2025
வரலாறு காணாத விலை.. தங்கத்திற்கு பதில் இதுவா?

<<17833490>>வெள்ளியின் விலை<<>> 1 கிலோ ₹1.53 லட்சத்தை எட்டியுள்ளது. முன்னதாக தொழில்துறையில் தான் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அதனை சில உலக நாடுகள் சேமித்து வைக்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வரும் நாள்களில் வெள்ளியின் விலை உயருமாம். எனவே தங்கத்தில் 10-15% முதலீடு செய்தால், வெள்ளியில் 4-5% முதலீடு செய்வது நல்லது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
News September 27, 2025
ஆஸி., நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு கெளரவம்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் தேவாவுக்கு அங்குள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்ற தமிழர்கள், அவரை சபாநாயகரின் இருக்கையில் அவரை அமர வைத்து, கையில் செங்கோல் கொடுத்துக் கெளரவித்தனர். தனக்கு கொடுக்கப்பட்ட கௌரவத்தால் தேவா மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.